Translate To ur Language

மௌனவெளி...: அன்னையை தேடி .... விழிமுடிடும் போது வழி தேடிட...

மௌனவெளி...:

அன்னையை தேடி ....



விழிமுடிடும் போது வழி தேடிட...
: அன்னையை   தேடி  .... விழிமுடிடும்   போது   வழி   தேடிடும்   கனவு அலைபாயும்   உன்   நினைவு எனக்குள்ளே  - நீயின்றி அனா...

சுஜாதாவின் பக்கங்கள்:  கவிதை !!!சிக்கல்!!!!! சிக்கல்!!!! சிக்கல் சீரழி...

சுஜாதாவின் பக்கங்கள்:  கவிதை !!!சிக்கல்!!!!! சிக்கல்!!!!


சிக்கல் சீரழி...
:  கவிதை !!! சிக்கல்!!!!! சிக்கல்!!!! சிக்கல் சீரழிவு வாழ்க்கை நடைமுறையில் சிக்கலாகிடும் சிற்சிலவேளைகளில் அற்பவிடயம் அலைக்கழிப்பு ஆனால...

ஜார்ஜ் பெர்னாட்ஷா

ஜார்ஜ் பெர்னாட்ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) 
ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும் படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.
உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை உணர்ந்து அவர் மிகுந்த கோபம் கொண்டார். மேலும் அவரது பெரும்பாலான படைப்புகள் அந்த சுரண்டலைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்தன. ஒரு தீவிர சமூகவாதியாக ஃபேபியன் சொசைட்டிக்காக (Fabian Society) பெர்னாட் ஷா பல சிற்றேடுகளை எழுதி சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். விரைவில் அதற்குக் காரணமாக விளங்கும் ஆணுக்கு சமமான பெண்ணுரிமையைப் பெறுதல், உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை ஒழித்தல், உற்பத்தி நிலங்களின் தனியார் உரிமையை மீட்டல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரப்புதல் ஆகியவை தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தும் சொற்பொழிவாளரானார்.
பெர்னாட் ஷா, சார்லோட் பாய்னெ-டௌன்செண்ட் (Charlotte Payne-Townshend) என்ற சமூக சீர்திருத்தவாதியை திருமணம் செய்துகொண்டு அவருடனே வாழ்ந்தார். அவர்கள் ஷா'ஸ் கார்னர் (Shaw's Corner) என்று இன்று அழைக்கப்படும் ஆயோட் செயிண்ட். லாரன்ஸில் (Ayot St. Lawrence) உள்ள வீட்டில் வசித்துவந்தனர். கீழே விழுந்ததனால் பெற்ற காயங்கள் மோசமானதால் ஏற்பட்ட நாள்பட்ட சிக்கல்களால் பெர்னாட் ஷா தனது 94 ஆம் வயதில் இறந்தார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே. அவர் இவ்வெகுமதிகளை முறையே இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புக்காகவும் பிக்மேலியன் என்னும் திரைப்படத்தின் பணிக்காகவும் பெற்றார்.பொது வெகுமதிகளுக்கான ஆசை தனக்கு இல்லை என்பதால் பெர்னாட் ஷா உடனடியாக நோபல் பரிசை நிராகரிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அவரது மனைவியின் வேண்டுகோள் படி ஏற்றுக்கொண்டார்: அவரது மனைவி அதை அயர்லாந்துக்கு கௌரவம் எனக் கருதினார். பரிசுத் தொகையை அவர் நிராகரித்து அதை ஸ்வீடிஷ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான நிதியாக அதைப் பயன்படுத்திக்கொள்ளக் கோரினார்

Copy Rights

V.JAYATHAS