Translate To ur Language

பெண்விடுதலை ...

 வணக்கங்கள் உறவுகளே..

சம காலத்தில் பல்வேறு சூழ்நிலைகள் பெண்விடுதலை அல்லது சமத்துவம் தொடர்பாக பேசவைக்கின்றன அல்லது பேசுகிறார்கள் ஆனால் பாமர தமிழனிடமும் சாதாரணமாக எழக்கூடிய வினா ஒரு சகோதரிக்கு நடந்த கொடூரத்தை நாகிழிய கண்டிக்கும் நல்லவர்கள் இவ்வத்தனை பேரும் இங்கு இது நடக்கையில் எங்கு சென்றார்கள்? என்பதேயாகும்.இங்கு நடக்கும் போது சும்மா இருந்து விட்டு அங்கு நடந்தால் மட்டும் தட்டிக்கேட்கிறார்கள். என சண்டை செய்வது சம்மந்தப்பட்ட சகோதரிகளை இன்னும் கேவலப்படுத்துகிறது..இப்போதாவது பெண்கள் விடயத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என தேற்றிக்கொள்ளவேண்டுமே தவிர அரசியலை முன்னிறுத்தி மனிதநேயத்தை நாம் மறக்ககூடாது.
.இன்னும் சிலர் இங்கு நடந்த கொடூரங்களை பச்சை பச்சையாக இப்பொழுதுதான் எழுதுகிறார்கள் இவை கண்டிக்கதக்கது இதை முகப்புத்தகத்தினூடு நோக்கும் உறவுகளிற்கு வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போல் மட்டுமன்றி கீழ்த்தரமான உணர்வுள்ளவர்களை இப்படித்தான் பண்ணுவார்கள் என உசுப்பேத்திவிடும் செயல்பாடுமாகும்..அங்கு நடந்தாலென்ன இங்கு நடந்தாலென்ன எங்கு நடப்பினும் பாதிக்கபடுவது சகோதரிகளே என்ற பொது நோக்கு வளர வேண்டும்.ஆனால் கங்கைமுதல் கடாரம் வரை ஒருகாலத்தில் கட்டியாண்ட தமிழனுக்கே குரல் கொடுக்க இன்று எவனுமில்லை நாளை இவர்களிற்கும் காலம் மாறாமலா போகுமென தேற்றிக்கொள்வோம்..பெண்களிற்கெதிரான வன்முறை அல்லது பிரச்சனை என வரும்போது ஒட்டுமொத்தமாக ஆண்சமூகத்தின்மீது குற்றஞ்சாட்டுவதை முகப்புத்தகத்தின் மூலைகளில் கண்டு கவலையடைந்தேன்.இது தொடர்பில் பலரின் கருத்துக்கள் அடியேனையும் எண்ணத்தூண்டியது நன்றிகள் அவர்களிற்கு.இவர்களின் கண்களிற்கு "வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போமென பேசிய விந்தை மாந்தர் தலை கவிழந்தார்" என பெண்விடுதலை தொடர்பில் பெண்களே குரல்கொடுக்க அஞ்சிய காலத்தில் நெஞ்சைநிமித்தி பாடிய பாவலன் நினைவிற்குவரவில்லைபோலும்.பெண்கள் விடயத்தில் ஆண்கள் தலையிட முடியாது என்றுரைக்கும் சகோதரிகள் சற்று பின்னோக்கி பார்க்கவேண்டும்..இங்கு தவறு பெண்கள் பக்கமோ ஆண்கள் பக்கமோ என்பதல்ல பிரச்சனை யார் மனிதனல்ல என்பதே பிரச்சனையாகும் மனிதர்களில் தவறு யார் பக்கமும் இருக்கலாம் ஏனெனில் எங்கும் எதிலும் 100% சரியாக இருக்க இறைவன் ஒருவனாலேயே இயலும் எனவே தவறுகள் திருத்தப்படவேண்டியவை அந்த மனிதன் என்பவன் கொண்ட தொகுதி மக்கள் எனப்படும் இந்த மக்கள் மாக்களாக மாறும் போதே பிரச்சனை உருவெடுக்க தொடங்குகிறது எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து இப்படித்தான் வாழவேண்டும் என ஒரு வரையறைக்குள் பண்பாட்டுக்கோலத்தில் கட்டுக்கோப்புடன் வாழ்ந்த சமூகத்தில் பெண்களுக்கான சுதந்திரம் எழுதாவிதியாக இருந்ததை 4 ஆண்டுகளுக்கு முன்வரை நாம் கண்கூடு கண்டிருப்போம்ஆனால் இன்று தறிகெட்டு நெறிகெட்டு பிறழ்வடைந்துள்ளமைக்கு பிரதான காரணம் சடுதியான கட்டுப்பாட்டுடைவும் சினிமா சீரழிவுமேயாகும் கானமயிலாட கண்டிருந்த வான்கோழியும் ஆடியதாம் என்பது முதுமொழி அங்கு அப்படிபண்ணுகிறார்கள் இங்கு நாம்பண்ணினாலென்ன என்று சினிமாவை பாத்து சிந்திக்கிறார்கள் நமது மனிதர்கள் அதன் விளைவே இன்றைய புறச்சூழல்கள்.நாமும் மாறத்தான் வேண்டும் புதிய விடயங்களை உள்வாங்கதான் வேண்டும் ஆனால் இதுவல்ல மாற்றம்..மேற்குலகில் புதிய கண்டுபிடிக்கள் உருவாகிறது அங்கே இவ்வாறு அறிவால் வளர்கிறார்கள் என எண்ணி நாம் போட்டிபோடுகிறோமா என்றால் அது இல்லை அங்குள்ள Beach & Resturent போன்ற ஆடம்பரங்கள் தான் நம்மவரின் கண்களுக்குமுதலில் தெரியும் அந்தளவுக்கு நமது கண்கள் தேய்ந்துபோயுள்ளன சினிமாவில் கூட எவ்வளவோ தொழில்நூட்பங்கள் நல்ல கருத்துள்ள திரைப்படங்கள் வருகின்றன அதை உள்வாங்கவும் நமது மனித மனங்கள் தயாராக இல்லை ஆனால் எதேதோ எல்லாம் உள்வாங்கி Apply பண்ணுகிறார்கள்..இங்கு ஒட்டுமொத்தமாக அனைவரையும் குற்றஞ்சாட்டவில்லை என்பதை கவனியுங்கள் உறவுகளே..ஒருவன் அடிக்கும்போது பிரச்சனைக்கு பயந்து வாய்மூடி மௌனியாக இருப்பின் அடிவாங்கியவனே பழியை சுமக்க வேண்டி ஏற்படும் யதார்த்த வக்கிர வங்குரோத்தான சிந்தனைகள் மாறும் வரை பெண்களுக்கெதிரான வன்முறை அதாவது மானிட குலத்திற்கெதிரான வன்முறை என்றும் குறையாது என் தமிழ் உறவுகளே..
"இனியொரு புது விதி செய்வோம்"

Copy Rights

V.JAYATHAS