வணக்கங்கள் உறவுகளே..
சம காலத்தில் பல்வேறு சூழ்நிலைகள் பெண்விடுதலை அல்லது சமத்துவம் தொடர்பாக பேசவைக்கின்றன அல்லது பேசுகிறார்கள் ஆனால் பாமர தமிழனிடமும் சாதாரணமாக எழக்கூடிய வினா ஒரு சகோதரிக்கு நடந்த கொடூரத்தை நாகிழிய கண்டிக்கும் நல்லவர்கள் இவ்வத்தனை பேரும் இங்கு இது நடக்கையில் எங்கு சென்றார்கள்? என்பதேயாகும்.இங்கு நடக்கும் போது சும்மா இருந்து விட்டு அங்கு நடந்தால் மட்டும் தட்டிக்கேட்கிறார்கள். என சண்டை செய்வது சம்மந்தப்பட்ட சகோதரிகளை இன்னும் கேவலப்படுத்துகிறது..இப்போத ாவது பெண்கள் விடயத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என தேற்றிக்கொள்ளவேண்டுமே தவிர அரசியலை முன்னிறுத்தி மனிதநேயத்தை நாம் மறக்ககூடாது.