வணக்கம்
உலகமெங்கும் பரந்துவாழும் மகளிர் அனைவருக்கும் எனது சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.."வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போமென்ற விந்தை மாந்தர் தலைகவிழ்ந்தார்" என்று அன்று பாரதி முழங்கினார். ஆனால் இன்று இதை ஆண்கள் மாற்றிப்பாட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படும் நிலையில் பெண்களின் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது...அதிலும் போருக்கு பொட்டு வைத்தனுப்பிய பெண்கள் போரில் நேரடியாக சமராடிய பெருமை தமிழ் மகளீருக்கு மட்டுமே உரியது...எனினும் தற்போது சமூகவிரோத அரசியல் கலாச்சார சக்திகளால் பலிக்கடா ஆக்கப்படுவதும் இதே மகளீர் தான்....ஆடம்பரங்களுக்கு விலைபோய் கலாசார சீரழிவுகளுக்கு துணைபோவதும் தற்போதைய சூழலில் தெளிவாக உணரமுடிகிறது...இவ்வாறான வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியிலும் தமிழரின் கலாசார காவலர்களாய் பெண்ணுரிமை பேசும் சக்திகளாய் ஆனேக பெண்கள் சிகரத்தில் உள்ளார்கள் இவர்கள் போற்றுதற்குரியவர்கள்...இவர்களே மகளீரில் மகளீர்...அன்பு சகோதரிகள்,
நண்பிகள் அனைவருக்கும் மீண்டும் எனது இனிய அனைத்துலக மகளீர் தின வாழ்த்துக்கள்.
"பெண்மையை போற்றுவோம்"
நன்றி
V.ஜயதாஸ்(தாஸ்)