Translate To ur Language

காதல் ஒரு கண்ணோட்டம்

வணக்கம் உறவுகளே



காதல் பல வகைப்படும் கண்டவுடன் காதல்,அன்புக்காதல்,அடக்குமுறைக்காதல்,அடிதடிக்காதல்,உண்மைக்காதல்,வேஷம்போடும் காதல்,தியாககாதல், தீயகாதல்,உணர்வுக்காதல் இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம் அடியேனுக்கு எந்த அனுபவங்களும் இல்லையாயினும் எனது நெருங்கிய நண்பர்களின் அனுபவங்களிலிருந்து எனது எண்ணக்கருத்துக்களை பதிகிறேன்.
அன்பு என்ற பதத்திற்கு ஆங்கில அகராதி கொடுத்த வாசகமே love இது நம்மிடத்திலே காதல் என்ற வரைவிலக்கணத்துக்கள் வந்து அன்பை தூரத்தொலைத்துவிட்டுள்ளது.
நண்பர்கள் சொல்வதற்காக காதலிப்பதோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைக்காக காதலிப்பதோ ஒரு போதும் காதல் என்ற பதத்தினுள் வந்துவிடமுடியாது..அழகைப்பார்த்துவரும் காதலும் அழகுடன் காணாமல் போய்விடும்.
காதலிக்க உனக்கு எவ்வளவுக்கெவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேயளவு உரிமை நிராகரிப்பதற்கும் இருக்கிறது..நிராகரிக்கப்பட்டவுடன் வீண் பழி சுமத்தி அவமானப்படுத்தப்படுவது உனது அன்பையே தவிர அந்த நபரை அல்ல..
பத்து பதினைந்து பேரையும் காதல் பண்ணுகிறோம் என அலையும் கூட்டங்களால் காதல் அசிங்கப்படுகிறது எனவே இப்படியானவர்கள் தங்கள் செயற்பாடுகளால் இந்த பதத்தை கொச்சைப்படுத்தாமல் வேறு பதங்களை உபயோகியுங்கள்..
சங்ககாலம் முதல் கலியுக காலம் வரையான நமது வரலாற்றின் பக்கங்களை புரட்டும்போது இது நமது கடவுளர்கள் முதல் தமிழ் மூவேந்தர்களின் ஆட்சியில் கூட மாட்சிமை செலுத்தியுள்ளது...எனவே கட்டுக்கோப்பற்ற ஒழுக்கம் தவறிய அன்பு குன்றிய காதல்களை மட்டும் எடுத்து நோக்கி காதலால் கலாசாரம் சீரழிகிறது என வகையிடவேண்டாம்..கலாசாரம் சீரழிகிறது காதலால் அல்ல காமத்தாலேயாகும்..

உண்மையாக அன்பு செலுத்தி தோற்றவர்கள் வீணாக கவலைப்படத்தேவையில்லை காதலில் தோல்வியடைந்தவர்கள் என எவருமில்லை ஏனெனில் அவர்கள் நலன் சார்ந்து நீங்கள் எடுத்த முடிவு போற்றற்குரியது. எதோவொரு காரணத்தால் இணைய முடியவில்லை அவ்வளவுதான்.காதலின்றி வாழ்க்கையில்லை என்பது மூடத்தனம் வாழ்க்கையெனும் கடலின் சிறு துரும்பே காதல்..துரும்பு திசை மாறலாம் உக்கிப்போகலாம் அலைகளில் அடித்து செல்லப்படலாம் வேறு கரை சேரலாம் ஆனால் வாழ்வெனும் கடல் வற்றிப்போகாது..

பிடிப்பதும் ஈர்ப்பதும் அன்பும் மட்டுமெனின் அது நெருங்கிய உறவேயொழிய வேறில்லை அதையும் தாண்டி இவன்/இவள் இன்றி என் எதிர்காலமேயில்லை எனும் உணர்வு நிலையே காதல்..இப்படியான உணர்வுநிலை இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்போது தோன்றுகிறதோ அந்த உறவே உனக்காக படைக்கப்பட்டஉறவு இந்த உறவு திருமணத்தின் முன்னும் இருக்கலாம் பின் வரும் மனைவியின் மீதும் இருக்கலாம்.காதலிக்கும் நீங்கள்
வழங்கும் மிகச்சிறந்த பரிசுப் ெபாருள் உங்களின் பரிசுத்தமான அன்பு தான்....இதய பூர்வமாக உங்கள் அன்ைப ெவளிப்படுத்துங்கள் .....

அன்பு பாசம் அக்கறை உண்மையான நட்புக்குள்ளேயே வந்துவிடும் இதற்கு மேலும் என்ன தேவை வேண்டிருக்கிறது காதலிக்க? or என்ன இருக்கிறது காதலில்? இது எனக்குள் எழும் வினா 

உண்மையான அன்பு + எதிர்காலம் வளமாகும் எனும் நம்பிக்கை + கட்டுக்கோப்பான உறவு + பூரண புரிந்துணர்வு உடைய காதலித்துக்கொண்டிருக்கும் & திருமணத்தின் பின் இறைவனால் கிடைத்த வாழ்க்கைதுணையை கஷ்ரப்படுத்தாமல் அன்பை வாரி வழங்கி அந்த வாழ்க்கைத்துணையை காதலித்துக்கொண்டிருக்கும் உறவுகளிற்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
அடியேனை போல் காதலிக்காதவர்களும் காதலில் தோற்றவர்களும் நம்மன்பை சூழ உள்ளவர்கள் மேல் செலுத்துவோம் நமக்கான உறவு கிடைக்கும் வரை.
"இனி ஒரு புது விதி செய்வோம்"
by:-வ.ஜயதாஸ்

    Copy Rights

    V.JAYATHAS