Translate To ur Language

Mother's Day Special Part two

MOTHER'S ARE THE SWEETEST-தாஸ் இன் அன்னைக்கு ஆராதனை




உலகெங்கும் வாழும் அன்புத் தெய்வங்களான அன்னையர்களுக்கு தாஸ் இன் உளம் கனிந்த வாழ்த்துக்கள்...


வைரமுத்துவின் வைர வரிகள்




ஆயிரம் தான் கவி சொன்னேன் ....
அழகா அழகா பொய் சொன்னேன்....
பெத்தவளே உன் பெரும
ஒத்தவரி சொல்லலியே ....
காத்து எல்லாம் மகன் பாட்டு....
காயிதத்தில் அவன் எழுத்து....
ஊரு எல்லாம் மகன் பேச்சு....
உன்கீர்த்தி எழுதலியே....
எழுதவோ படிக்கவோ இயலாத
தாய் பத்தி
எழுதி என்ன லாபம்ன்னு
எழுதாம போனேனோ....
பொன்னையாதேவன் பெத்த பொன்னே
குல மகளே....
என்னை புறம் தள்ள இடுப்பு வலி
பொறுத்தவளே....
வைரமுத்து பிறபான்னு
வயித்தில் நீ சுமந்தது இல்ல....
வயித்தில் நீ சுமந்த ஒன்னு
வைரமுத்து ஆயிருச்சு...
கண்ணு காது மூக்கோட கருப்பாய்
ஒரு பிண்டம்....
இடப்பக்கம் கெடகையில என்ன
என்ன நெனச்சிருப்ப....
கத்தி எடுப்பவனோ ...களவான
பிறந்தவனோ....
தரணி ஆழ வந்திருக்கும்
தாசில்தார் இவன் தானோ....
இந்த விவரங்கள் ஏது ஒன்னும்
தெரியாம....
நெஞ்சு ஊட்டி வளத்த உன்ன
நெனச்சா அழுக வரும்....
கத கதனு களி கிண்டி....
களிக்குள்ள குழி வெட்டி....
கருப்பட்டி நல்லெண்ண கலந்து
தருவாயே....
தொண்டி இல இறங்கும்
சுகமான இளம் சூடு....
மண்டையில இன்னும் மச மசன்னு
நிக்குது அம்மா....
கொத்த மல்லி வறுத்து வச்சு....
குறு மொளக ரெண்டு வச்சு....
சிறகமும் சிருமிளகும்
சேர்த்துவச்சு வச்சு நீர்
தெளிச்சு ....
கும்மி அரைச்சு...நீ கொழ
கொழன்னு வழிகைல...அம்மி
மணக்கும்... அடுத்த தெரு
மணமணக்கும்……..
திஹிக்க சமச்சாலும்....
திட்டிகிட்டே சமச்சாலும்....
கத்திரிக்காய் நெய் வடியும்
கருவாடு தேன் ஒழுகும்....
கோழி கொழம்பு மேல குட்டி குட்டியா
மிதக்கும்....
தேங்க சில்லுக்கு தேகம் எல்லாம்
எச்சி உறும்....
வறுமை இல நாம பட்ட வலி
தாங்க மாட்டமா....
பேனா எடுத்தேன் ...பிரபஞ்சம்
பிச்சு ஏறுஞ்சேன்....
பாசம் உள்ள வேளையிலே காசு
பணம் கூடலியே....
காசு வந்த வேளையிலே பாசம்
வந்து சேரலியே....
கல்யாணம் நான் செஞ்சு கதி எது
நிக்கைல ,பெத்த அப்பன் சென்னை
வந்து சொத்து எழுதி போன பின்னே....
அஞ்சு, ஆறு வருஷம் ...உன் ஆசை
முகம் பாக்கமா பிள்ளை மனம்
பித்து ஆச்சே...பெத்த மனம் கல்லு
ஆச்சே....
படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி
வச்ச மகன் கை விட மாட்டான்னு
கடைசில நம்பலயே....
பாசம்....
கண்ணீர்....
பழைய கதை
எல்லாமே வெருசோடி போன
வேதாந்தம் ஆயேடுச்சே ....
வைகை இல ஊரு முழுக....
வல்லோரும் சேர்த்து எழுத ...கை
பிடிச்சு குட்டி வந்து கர சேர்த்து
விட்டவளே....
எனக்கு ஒன்னு ஆனதுன உனக்கு
வேறு பிள்ளை உண்டு ...உனக்கு ஒன்னு
ஆனதுன எனக்கு வேறு தாய்
இருக்கா...........?





என்னை கவர்ந்த வரிகள் 

  • என்முன்னே பிரசவ வேதனையில் துடித்தவாறே மரணத்தின் எல்லைக்கோட்டில் நின்று தன் குழந்தைக்கும் இப்படி வலிக்குமோ என்று விழிநீர் கசியும் உறவு உன்னைப்பால் யார் உலகில் மழையின் முடிவில் முகம்பாராமலே என்னை நேசித்த உறவு நீ..
    நொடிக்குநொடி மாறும் உலகில் நான் இரண்டு தடவை புரண்டு படுத்தால் என் நெற்றி தொட்டுப்பார்க்கும் உன் விரல்கள் மட்டும் அதே மாறா ஈரத்துடன்
    மழையின் முடிவில் குடையின் நுனியில்
    நீர்த்துளிகளாய் நாம் பிரிந்தாலும்
    என்கலங்களில் நுழைகிறது உன்பேரன்பு
    இலட்சிய வேகம் வெயில் நெடி தாகம் அன்பின் சோகம் சொல்லாமலே புரிந்து கொள்வாள் அன்னை
    என் இருள் வழியில் நிலவானாய் என் வலிப்பொழுதில் நட்பானாய் உயிர் உலர்ந்தேன் பனியானாய்
    நீ அருகிருந்தால் நான் அதிதி
    நீ தொலைவானால் நான் அகதி
    எத்தனை குற்றங்களைதான் உன்னிடத்தில் நான் புரிந்திருப்பேன்
    உன் கருவறையில் இருந்த நாட்களில் எத்தனை தடவை வயிற்றிலிருந்து உதைத்திருக்கிறேன்
    நீ ஆழ்ந்துறங்கிய எத்தனை தடவைகள் உன் தூக்கம் கலைத்திருக்கிறேன்
    ஆனால் என் குற்றங்களுக்கெல்லாம் முத்தம் வழங்கிய ஒற்றை தேவதை நீ தான்.

    வரிகளுக்கு சொந்தக்காரன் சதீஷ்

அன்னைக்கு ஆராதனை




அன்னைக்கு ஆராதனை

இன்று மட்டுமன்றி அன்னையை மனதில் ஒவ்வொரு நிமிடமும் ஆராதிப்போம்.
"தாய்மை போற்றுவோம்"
நன்றி.
By:-V.JAYATHAS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copy Rights

V.JAYATHAS