Translate To ur Language

Friendship Day Special

வணக்கம் உறவுகளே...

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.



பெற்றோர் உற்றோர் அனைவரும் இருந்தும் எந்தவித ரத்த சம்மந்தம் இல்லாமல் எனக்கு ஒன்னுனா துடிக்கிற எந்த வேளையிலும் எந்த சூழ்நிலையிலும் என்னுடன் புரிந்துணர்வுடன் பயணிக்கும் என் உயிர் தோழமைகளுக்கும், நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...Happy Friendship Day Wishes 




வாழ்க்கை என்பது அற்புதமான விஷயம் ;ஒரு மீளமுடியாத பயணம்.
இந்த பயணத்தில் சந்திக்கும் நபர்களும் அவர்களால் ஏற்படும் அனுபவங்களும் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிற ,மாற்றியமைகின்ற அம்சமாக பெரும்பாலும் அமைந்து விடுகிறது.பேருந்து பயணத்தில் அருகில் இருந்தாலும் யாரென்று தெரியாமலே கடந்து போகும் நபர்களை போல சிலரும் ...
ரயில் பயணத்தில் பயணகாலம் வரை பேச்சுதுணையாய் இருந்துவிட்டு விலகிபோகும் நபர்களைப் போல சிலரும் ...
விமானப் பயணத்தில் வேறு வழியின்றி அருகாமை நபரோடு சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளும் நபர்களைப் போல சிலரும் 
இன்னும் இன்னும் எத்தனை விதமான மனிதர்கள் ???

இப்படி வாழ்க்கை பயணத்தில் கடந்து போகிறார்கள் மனிதர்கள் ,அதில் யாரோ சிலரின் நினைவுகள் தான் கைரேகையைப் போல கூடவே வந்துவிடும்.இதில் நட்பு என்பது எங்கும் எதிலும் அதாவது தாய் பிள்ளைகள் தந்தை கணவன் மனைவி சகோதரன் சகோதரி காதலன் காதலி இவ்வாறு எந்த உறவுக்கும் அடிப்படையாக அமைவதாகும்...


உன் நண்பர்களை காட்டு உன்னை பற்றி சொல்கிறேன் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள் அந்தளவுக்கு நம்மை பிரதிபலிப்பவர்கள் நமது நண்பர்கள்..தோளில் கைபோடுவனெல்லாம் நண்பனல்ல துன்பம் நேர்கையில் தன்னலம் பார்க்காது தோள் கொடுப்பவனே நண்பன்.உனது உணர்வுகளை புரிந்துகொண்டு எப்போதும் எந்நிலையிலும் கூட இருக்கவேண்டுமே தவிர சில பல சூழ்நிலைகளை காரணம் காட்டி புறந்தள்ளி விடுபவனெல்லாம் உயிர் நண்பன் கிடையாது..
——————————————————————————————————
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். (குறள் 796)
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.
——————————————————————————————————
நமது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க எந்தளவு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவு நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பதிலும் இருக்கவேண்டும். அவர்களை ஒட்டியே நமது வாழ்க்கையின் ஓட்டம் அமைகிறது.உங்களை சுற்றி உள்ள நண்பர்களில் நல்ல நண்பன் என்று யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு திருமண வயதில் அக்காவோ தங்கையோ இருந்தால் நீங்கள்  அவளை எவருக்கு திருமணம் செய்துவைக்க ஒப்புக்கொள்வீர்களோ அவரே உங்கள் உண்மையான / நல்ல நண்பன்.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. உங்களை சுத்தி இப்படி யாராவது இருக்காங்களா? இந்த CATEGORY க்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல. அப்படி உங்களால் உங்களை சுற்றியிருப்பவர்களுள் எவரையேனும் அடையாளம் காட்ட முடிந்தால் அவனே நல்ல நண்பன். அப்படிப்பட்ட நண்பன்  ஒருத்தன் உங்க கூட இருந்தாலும் நீங்க பாக்கியசாலி மட்டுமில்லே.. இந்த சொசைட்டியில் நீங்க ஒரு மிகப் பெரிய மனிதர். காலரை தூக்கி விட்டுக்கொள்ளுங்கள்.
ஆகையால் தான் ‘நட்பாராய்தல்’ என்று நட்பை தேர்ந்தேடுப்பதர்க்கென்றே ஒரு தனி அதிகாரத்தை திருவள்ளுவர் வைத்திருக்கிறார்.

நல்ல நண்பன் என்ற தலைப்பில் கவியரசு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில் கூறியிருப்பதை படியுங்கள்… 

நல்ல நண்பன்
நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.
முகத்துக்கு நேரே சிரிப்பவன், முகஸ்துதி செய்பவன்,  கூனிக் குழைபவன், கூழைக் கும்பிடு போடுபவன், இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான். ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். நன்றாக ஆராய்ந்து, `இவன் நல்லவன்தான்’ என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக்கூடாது.
“அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும்” என்றான் வள்ளுவன்.
தேரான் தெளிவும் தெளிந் தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

சரி, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழகவேண்டும். கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாகக் கருதக்கூடாது. வெறும் பழக்கமாகத்தான் கருதவேண்டும்.
உனக்குக் கஷ்டம் வந்தபோது அவன் கைகொடுத்தால்,பிறர் உன்னைப்பற்றித் தவறாகப் பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால், அவனை நீ நம்பத் தொடங்கலாம்.
தொடர்ந்து இது போன்ற பல செய்திகளைக் கேள்விப்பட்ட பிறகுதான், அவனை நண்பனாக நீ வரித்துக் கொள்ளவேண்டும்.
நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல. ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு. நீ அழும்போது உண்மையிலேயே அவனுக்கும் அழுகை வருகிறது என்றால், அதுதான் நட்பு.
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.” என்றான் வள்ளுவன்.

நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்
ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று, வாழைமரம் போன்றவர்கள்.
பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது. தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது. நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்ற நண்பன்.
தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்குப் பலன் தருகிறது. அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக் கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னைமரத்துக்கு இணையான நண்பன்.
வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் நமக்குப் பலன் தருகிறது. அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக் கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.
இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நண்பன். எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள். எனக்குக் கிடைத்த நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர் இருவரே அப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தார்கள் என்பது பொருத்தம்.

வீடணன் நண்பனானபோது, வீடணனைப் பார்த்து ஸ்ரீ ராமன் சொன்ன வார்த்தைகள் இவை.
“வீடணா! நானும் இலக்குவனும், பரதனும், சத்துருக்கனனும் நான்கு சகோதரர்களாகப் பிறந்தோம். கங்கை இரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான் குகனைச் சந்தித்தபோது, நாங்கள் ஐவரானோம். சுக்ரீவன் எங்களோடு சேர்ந்தபோது நாங்கள் அறுவரானோம். உன்னைச் சேர்த்து இப்போது எழுவராகி விட்டோம்.”
ஆம்! ராமனுக்கு அவர்கள் செலுத்திய அன்புக் காணிக்கை ராமனுடைய சகோதரர்களாகவே அவர்களை ஆக்கிவிட்டது.
நல்ல நட்புக்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ அவை எல்லாம் கூடிவாய்க்கப் பெற்ற ஒருவன் நண்பனாக மட்டுமின்றிச் சகோதரனாகவும் ஆகிவிடுகிறான்.
நண்பர்கள் தனக்கு உதவி செய்தார்கள் என்பதற்காகத் தன் சொந்த சகோதரர்களையே விரோதித்துக் கொண்டு செஞ்சோற்றுக் கடன் கழித்து, ஒருவன் மகாபாரதத்தில் காட்சியளிக்கிறான். அவனே கர்ணன். கர்ணன் குந்தியின் மகன்; பாண்டவர்களின் சகோதரன்.
கௌரவர்கள் அவனிடம் பாராட்டிய நட்புக்காக, அவர்கள் செய்த உதவிக்காக, போர்க்களத்தில் தன் சகோதரர்களையே எதிர்த்தான் கர்ணன். நட்பு என்பதும், செஞ்சோற்றுக் கடன் கழித்து நன்றி செலுத்துவது என்பதும் இந்துக்களின் மரபு. அந்த மரபின், நட்பின் மேன்மையை வற்புறுத்தும் புராணக் கதைகள் பலவுண்டு.

எதிரிகளைப் பற்றி நான் வாசித்து, பின்பற்றும் வழிகளை உங்களோடும் பகிர்ந்துகொள்ள இந்தப் பதிவு..
1.உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை எதிரியாகக் கணித்துக் கொண்டிருந்தால் உங்களது இயல்புகளை அவருக்கு சரியாகப் புரியச் செய்து ஒரு எதிரியைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
2.நீங்கள் அறியாத ஒருவர் உங்களை எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கிறாரா? விட்டுவிடுங்கள்.. தெரியாத ஒருவர் பற்றித் தேவையில்லாமல் யோசித்து மனதை ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? வேலி-ஓணான் கதை தான் இது.
3.வேண்டும் ஒன்றே ஒருவர் உங்களைத் தன் எதிரியாக்கி உங்களுடன் மோதுகிறாரா? நீங்கள் நண்பராக அணுக விரும்பினாலும் எதிரியாகவே இருப்பேன் என்று முரண்பிடிக்கிறாரா?விட்டுவிடுங்கள்.. அவர் தானாக உங்களுக்குப் பிரபல்யத்தையும் புகழையும் உருவாக்கித் தருகிறார். அதை உங்களுக்கான வெகுமதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் எல்லாமே சுலபமா இருந்தா கடவுளுக்கென்ன வேலை? தவிர, நமது பாதையில் நமக்கு வரக்கூடிய இடர்கள், தடங்கல்கள் தான் நம்மை சுற்றியிருப்பவர்களை நமக்கு சரியாக அடையாளம் காட்டும் எக்ஸ்-ரே கருவி

இந்த வேளையில் என்னுடன் பள்ளிப்பருவமுதல் இந்த வினாடிவரை அத்தனை விடயங்களிலும் பயணிக்கும் நண்பர்களை,நினைவுகளை மீட்டிப்பார்ப்பதோடு என்னுடன் ஒன்றாக உணவருந்தி கல்விகற்று பேரவலங்களில் அங்கவீனமான,நினைவுகளால் மட்டும் நீங்காமல் நீங்கிப்போன நண்பர்களுக்காக இறைவனை பிரார்த்தித்து விடைபெறுகின்றேன்.. நன்றி BY:- urs friend/brother V.T.V.JAYATHAS "வீழ்வது அழுவதற்கல்ல மீண்டும் எழுவதற்கே"
help:-
http://rightmantra.com

மௌனவெளி... Bavi

Ippadiku naan..Pirunthapan


International Friendship Day

International Friendship Day is a day for celebrating friendship. The day has been celebrated in several southern South American countries for many years, particularly in Paraguay, where the first World Friendship Day was proposed in 1958.
Initially created by the greeting card industry, evidence from social networking sites shows a revival of interest in the holiday that may have grown with the spread of the Internet, particularly in India, Bangladesh, and Malaysia. Digital communication modes such as the Internet and mobile phones may be helping to popularize the custom, since greeting friends en masse is now easier than before. Those who promote the holiday in South Asia attribute the tradition of dedicating a day in honor of friends to have originated in the U.S. in 1935, but it actually dates from 1919. The exchange of Friendship Day gifts like flowers, cards and wrist bands is a popular tradition of this occasion.
Friendship Day celebrations occur on different dates in different countries. The first World Friendship Day was proposed for 30 July 1958.[4] On 27 April 2011 the General Assembly of the United Nations declared 30 July as official International Friendship Day. However, some countries, including India,celebrate Friendship Day on the first Sunday of August.

History
Friendship Day was originally promoted by Joy Hall, the founder of Hallmark cards in 1919, intended to be the 2nd August and a day when people celebrated their friendships by sending cards. The 2nd August was chosen as the centre of the largest lull between holiday celebrations. Friendship Day was promoted by the greeting card National Association during the 1920s but met with consumer resistance - given that it was rather too obviously a commercial gimmick to promote greetings cards. By the 1940s the number of Friendship Day cards available in the US had dwindled and the holiday largely died out there. There is no evidence to date for its uptake in Europe; however, it has been kept alive and revitalised in Asia, where several countries adopted the tradition of dedicating a day to friends. Today, Friendship Day is enthusiastically celebrated in a number of countries across the world.
In honor of Friendship Day in 1998, Nane Annan, wife of UN Secretary-General Kofi Annan, named Winnie the Pooh as the world's Ambassador of Friendship at the United Nations. The event was co-sponsored by the U.N. Department of Public Information and Disney Enterprises, and was co-hosted by Kathy Lee Gifford.
some friends acknowledge each other with exchanges of gifts and cards on this day. Friendship bands are very popular in India, Nepal, Bangladesh and parts of South America.[2] With the advent of social networking sites, Friendship Day is also being celebrated online. The commercialization of the Friendship Day celebrations has led to some dismissing it as a "marketing gimmick". But nowadays it is celebrated on the first Sunday of August rather than July 30. However, on July 27, 2011 the 65th Session of the United Nations General Asambly declared July 30 as "International Day of Friendship".

World Friendship Crusade
Since 2011 the United Nation recognizes July 30 as International Day of Friendship.
The idea of a World Friendship Day was first proposed on 20 July 1958 by Dr. Artemio Bracho during a dinner with friends in Puerto Pinasco, a town on the River Paraguay about 200 miles north of Asuncion, Paraguay.
Out of this humble meeting of friends, the World Friendship Crusade was born. The World Friendship Crusade is a foundation that promotes friendship and fellowship among all human beings, regardless of race, colour or religion. Since then, July 30th has been faithfully celebrated as Friendship Day in Paraguay every year and has also been adopted by several other countries.
The World Friendship Crusade has lobbied the United Nations for many years to recognise July 30th as World Friendship Day and finally on 27th July 2011 the General Assembly of the United Nations decided to designate July 30th as the International Day of Friendship; and to invite all Member States to observe the International Day of Friendship in accordance with the culture and customs of their local, national and regional communities, including through education and public awareness-raising activities.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copy Rights

V.JAYATHAS