Translate To ur Language

M.G.R Special


சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். ..



எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 171917 -டிசம்பர் 241987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்..
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்..
தோற்றம்17/1/1917.
பிறந்த இடம்கண்டி - இலங்கை
தந்தை பெயர்திரு. கோபாலமேணன்
தாயார் பெயர்திருமதி. சத்தியபாமா
சகோதரர் பெயர்திரு.எம்.ஜி.சக்கரபாணி
பள்ளியின் பெயர்கும்பகோணம் ஆணையடி பள்ளி.
படிப்பு3-ம் வகுப்பு
கலை அனுபவம்7 வயது முதல்
நாடக அனுபவம்1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்
சென்னை வருகைசென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி
சென்னையில் முதலில் வசித்த இடம்பங்காரம்மாள் வீதி
திதையுலகில் அறிமுகம் செய்தவர்திரு.கந்தசாமி முதலியார்
திரை உலக அனுபவம்1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.
நடித்து வெளிவந்த படங்கள்137 படங்கள்
கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள்115 படங்கள்
முதல் படம் வெளியான தேதி28/03/1936 - சதிலீலாவதி
முதல் வேடம்காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி
முதல் கதாநாயகன் வேடம்ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
100 வது படம்தமிழில்-ஒளி விளக்கு - 20/09/1968
கடைசி படம் வெளியான தேதி14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மறைவுக்கு பின் வெளியான படம்அவசர போலீஸ் 100
அரசியல் அனுபவம்1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்
முதன் முதலாக இருந்த இயக்கம்இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்
தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள்1950 முதல் 1972 வரை
அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு1972
தமிழக முதல்வரானது1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்
சென்ற வெளிநாடுகள்மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.
மறைவு24/12/1987
எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....
1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !

3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.

எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.

6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.
8. தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமிழ்ச்சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
                                                              Thank You
Prepared Help From Internet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copy Rights

V.JAYATHAS