வணக்கம் என் இனிய உறவுகளே...
தம்மை வாழ வைக்கும் சூரியனுக்கு நன்றிப்பெருக்கோடு விழாவெடுத்து பொங்கலிட்டு படைத்து அகமகிழ்வது தமிழர் பண்பாடு... மண்ணை நம்பியும் வானை நம்பியுமே வாழ்ந்த முன்னை தமிழனின் வழித்தொடராய் முழுத்தமிழனின் தேசிய திருநாளே தைப்பொங்கல் நன்னாள்...
என் இனிய உறவுகளே, கடந்த பல தசாப்தங்களாக சிறைப்பட்ட வாழ்வில் சிறப்பின்றி கழிந்த பொங்கல்களே கடந்து சென்றிருக்கின்றன,செல்கின்றன... வழி பிறக்கும் என்ற நம்பிக்கைகள் மாத்திரம் எதையும் சாதிக்காது.வலி சுமந்து பாடுபட தயாராவோம்...
புத்துணர்ச்சியோடு புதிய நம்பிக்கையுடன் புதிய தெம்புடன் புதிய ஆண்டை புதிய பாதையில் எதிர்கொள்ள தைப்பொங்கல் திருநாளில் உறுதி கொள்வோம்... தைப்பொங்கலை தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவதா இல்லையா என்ற ஆய்வுகளுக்கப்பால் இத் திருநாளை தமிழர் தேசிய பண்டிகையாக கொண்டாடப்படுவதன் நோக்கமறிந்து கொண்டாட முயற்சிப்போம்.. மன அழுக்குகளை கழுவித்துடைத்தகற்றி மனங்களை பண்படுத்தி இலட்சிய விதைகளை விதைப்போம் நாளைய விடியலுக்காக..
சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.. இனிய தமிழர் தேசிய திருநாள் நல்வாழ்த்துக்கள் உறவுகளே.. அன்பு பாராட்டிய நண்பர்கள் தோழிகள் மற்றும் என்னோடு பகைமை பாராட்டிய அனைத்து உறவுகளுக்கும்!
சிறப்பு தொகுப்புக்கு செல்லலாம்...
தைப்பெண்ணே வருக வருக
தைப்பெண்ணே வருக வருக உன் வரவால் …எம் மக்கள் மனம்.. மகிழட்டும்.. துவண்டு கிடக்கும் எம் …சம்முதாயம்.. துணிந்து எழட்டும் வாடீக் கிடக்கும்.. வயல் வெளியெங்கும்.. வளங்கள்…பெருகட்டும்…. பொங்கும் மங்களம் எங்கும் பொழிய பொங்கலே நீ… பொங்கி….வழிக..
தைப்பொங்கல் வாழ்த்து!!!!
உள்ளதொரு பண்பாடு நன்றி பாராட்டுவது.
தூரதேசத்திலிருந்து தைப்பொங்கல் வாழ்த்து!!!!
என்றும் உங்களுடன் உங்கள் அன்பு நண்பன் V.Jayathas(தாஸ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக